1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் அதே தரத்தில் புது பொலிவுடன் உங்கள் ஆவின் பால்..!!


தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம், தற்போது சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை தினமும் விற்பனை செய்து வருகிறது.ஆவின் நிறுவனம் சார்பாக நாள்தோறும் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த நிறுவனம் மூலம் பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் முதலான பால் உபயோக பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஆவின் பாலில் அதிகம் பலரும் வாங்கும் பால்பாக்கெட் நீல நிற பால். இதனை நைஸ் பால் என்று சொல்வார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் இந்த பால் அனைவருக்கும் ஏற்றது. அதாவது மீடியமான கொழுப்பு இதில் உண்டு. அதனால் எளிதில் ஜீரணம் ஆகும். இதனை குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள் என அனைவருமே உட்கொள்ளலாம். 100 கிராம் பாலில் 3 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது. பிங்க் பாலை டயட் பால் என்று கூறுவார்கள். அதாவது இது ஆரோக்கியத்துக்கானது. நோயாளிகள், வயதானவர்கள் என கொழுப்பு வேண்டாம் என ஒதுக்குபவர்கள் இந்த பாலை தேர்ந்தெடுக்கலாம். இதில் கொழுப்பு மிக மிக குறைவு. 100 கிராம் பாலில் 1.5 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது.

நீல நிறத்துக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பதுதான் பச்சை பால்.பச்சை நிற பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பாலில், அரை லிட்டருக்கு 4.5 கிராம் கொழுப்பு மற்றும் 3.2 கிராம் புரதம், 4.7 கிராம் மாவு சத்தும், 700 மில்லி கிராம் மினரல்களும் உள்ளன. இதில் 74 கிலோ கலோரி அளவுக்கு சக்தி உள்ளது.

ஆரஞ்சு நிற பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஆவின் பிரீமியம் பாலில், அரை லிட்டருக்கு 6 கிராம் கொழுப்பு மற்றும் 3.4 கிராம் புரதமும், 4.9 கிராம் மாவு சத்தும், 740 மில்லி கிராம் மினரல்களும் உள்ளன. இதில் 90 கிலோ காலரி அளவுக்கு சக்தி உள்ளது.

இந்த நிலையில், விரைவில்.. அதே சிறந்த தரத்தில் புதிய பொலிவுடன் உங்கள் ஆவன் என ஆவன் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.



Trending News

Latest News

You May Like