1. Home
  2. தமிழ்நாடு

வடிவேலு குரலில் எதிரொலிக்கும் மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள்- வெளியீடு..!!


மாமன்னன் படத்தின் முதல் சிங்கிளான “படையிருந்தும் பயந்த சனம்...” பாடல் வெளியாகி சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்டு மூவிஸ் நிறுவனம் சொந்தமாக தயாரித்துள்ளது.

இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்திற்கான அனைத்து ஷூட்டிங் பணிகளும் முடிவடைந்த நிலையில், தற்போது படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

கடந்த வாரம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் ரிலீஸ் தொடர்பான அப்டேட்டுகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் மாமன்னன் படத்தில் இருந்து முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.

'ராசா கண்ணு' என்கிற பெயரில் உருவாகியுள்ள இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார், நடிகர் வடிவேலு பாடியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வடிவேலு பாடுவது இதுவே முதல்முறை. மேலும் இந்த சிங்கிளுடன், பாடலுக்காக எடுக்கப்பட்டுள்ள காட்சிகளும் லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த பாடல் உருவான விதம் தொடர்பான காட்சிகளும் அந்த லிரிக்கல்

வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து கொண்டிருக்க, மாரி செல்வராஜ் மேற்பார்வை செய்ய வடிவேலு அந்த பாடலை பாடுகிறார். இந்த சிங்கிள் பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு சமூகவலைதளங்களில் கிடைத்து வருகிறது.


Trending News

Latest News

You May Like