ரூ.535 கோடி பணத்துடன் நடுவழியில் நின்ற லாரி!!
சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து 535 கோடி ரூபாய் பணத்துடன் சென்று கொண்டிருந்த தாம்பரம் அருகே பழுதாகி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து 535 கோடி ரூபாய் பணம் விழுப்புரம் வங்கிகளுக்கு கொடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2 வாகனங்களில் சென்று கொண்டிருந்தது. அப்போது தாம்பரம் அருகே ஒரு வாகனம் திடீரென பழுதானது.
இதையடுத்து சித்த மருத்துவமனை எதிரே வாகனம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் வாகனம் பழுதான இடத்துக்கு சென்றனர்.
பின்னர், வாகனத்தை இழுவை வண்டி மூலம் அங்கிருந்து சித்தா மருத்துவமனை வளாகத்திற்கு கொண்டு சென்று பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
newstm.in
.png)