ரயில்வே ஸ்டேஷன் காமுகனை.. பொறி வைத்து தூக்கிய போலீஸ்..!
கடந்த நவம்பர் 14ம் தேதி, குஜராத் உத்வாடா ரயில்வே ஸ்டேஷன் தண்டவாளத்திற்கு பக்கத்தில் 19 வயது இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்பட்டது.. இந்த பெண் யாரென்று தெரியாததால், அவரை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. தடயவியல் பரிசோதனையில் அந்தப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வல்சாத் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினார்கள்.. உத்வாடா ரெயில்வே ஸ்டேஷன் சிசிடிவிகள் ஆராயப்பட்டன. அப்போது பெண்ணின் சடலத்துக்கு பக்கத்தில், அதே மாதிரியான டிரஸ் அணிந்த நபர் ஒருவர், உணவு சாப்பிடுவது வீடியோவில் பதிவாகியிருந்தது.. ஆனால் அந்த நபரும் யார் என்று தெரியவில்லை.. அதனால், அவரது அடையாளத்தை வைத்து தேடும் பணி ஆரம்பமானது.. தேடுதல் குழுக்களும் அமைக்கப்பட்டன. இறுதியில், சம்பந்தப்பட்ட நபர், கடந்த நவம்பர் 24ம் தேதி குஜராத்தின் வாபி ரயில்வே ஸ்டேஷனில் கைது செய்யப்பட்டார்.. அவரது பெயர் ராகுல் கரம்வீர் ஜாட் என்பதும், ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
இளம்பெண் கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவத்தன்று, வேலை செய்த ஓட்டலில் தன்னுடைய சம்பளத்தை வாங்குவதற்காக வந்தாராம் ராகுல். அப்போதுதான், டியூஷன் முடித்துவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாகவும், அவரை கொன்றுவிட்டு அதே ரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து டிபன் சாப்பிட்டதாகவும் வாக்குமூலம் கூறினார்.
அந்த பெண் தன்னுடைய செல்போனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது, தன்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்ததாம்.. அந்த ஆத்திரத்தில்தான் ராகுல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டாராம். அதுமட்டுமல்ல, இதற்கு முன்பு, 5 பேரை கொலை செய்துள்ளதாகவும் கூறி, போலீசாரை அதிர வைத்தார் ராகுல்.. தற்போது கைதாவதற்கு முதல்நாள், அதாவது நவம்பர் 23ம் தேதி, தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில்வே ஸ்டேஷனிலும், பெண் ஒருவரை கொன்றுள்ளார்.
கடந்த அக்டோபர் இறுதியிலும், மகாராஷ்டிராவில் சோலாப்பூர் ரெயில் நிலையம் அருகே, மற்றொரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளார்.. மேற்கு வங்காளம் ஹவுரா ரெயில் நிலையம் அருகேயும், ஒரு வயதான முதியவரை கொன்றுள்ளார் ராகுல்.. பீடி கேட்டதற்கு அந்த தாத்தா தரவில்லையாம்.. அதனால் கொன்றுவிட்டதாக வாக்குமூலம் தந்துள்ளார்.. கர்நாடகா மாநிலம் முல்கி பகுதியில் ரெயில் பயணி ஒருவரையும் ராகுல் கொலை செய்துள்ளார்.. கடந்த 11 நாட்களில் மட்டும் 5 பேரை கொன்றுள்ளார்.. ராகுலின் அனைத்து கொலைகளும், வெவ்வேறு மாநில ரயில்வே ஸ்டேஷனிலேயே நடந்துள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர்.
பெரும்பாலும் ஒரு இடத்தில் இருக்காமல் பயணித்துக் கொண்டே இருப்பதால், ராகுலை பிடிப்பதில் அந்தந்த மாநில போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.. பெரும்பாலும் ரயில்வே பிளாட்பாரத்தில்தான் ராகுல் தூங்குவதால், கிட்டத்தட்ட 2000 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த பிறகுதான், போலீசில் சிக்கியுள்ளார்.

.png)