1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்கள் அதிர்ச்சி..! பெண்ணின் உயிரைப் பறித்த புஷ்பா 2..!

Q

புஷ்பா 2 திரைப்படம் இன்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தின் முதலாம் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் ரிலீஸ் ஆகி உள்ளது.
புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுடன் பகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா, ராவ் ரமேஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் மொத்தத்தையும் தனது தோளிலே சுமந்து ரசிகர்களை என்டர்டெயின் செய்துள்ளார் அல்லு அர்ஜுன்.
இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புக்குள் வெளியான இந்தியன் 2, தேவரா, கங்குவா, போன்ற படங்கள் படு தோல்வியை சந்தித்தன. அதேபோல புஷ்பா 2 படமும் 1500 கோடிகளை வசூலிக்குமென்று இதன் பட குழுவினர் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தெரிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளதுடன், குழந்தை ஒன்றும் மயக்கம் அடைந்துள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, புஷ்பா 2 படத்தை பார்க்கச் சென்ற அல்லு அர்ஜுன் வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன்போது பெண்ணொருவர் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதோடு, லேசான தடி அடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like