1. Home
  2. தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவு – வானதி சீனிவாசன் இரங்கல்..!

1

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் திரு. என். சங்கரய்யா அவர்கள் தனது 102-வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சங்கரய்யா மறைவிற்கு வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் திரு. என்.சங்கரய்யா அவர்கள்   உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்திகேட்டு மிகவும் வேதனையடைந்தேன். 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.என பதிவிட்டுள்ளார் 
 


 

Trending News

Latest News

You May Like