1. Home
  2. தமிழ்நாடு

பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு..!

Q

பஞ்சாப் மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்கு மத்தியில் தல்வாண்டி சபோ பகுதியில் இருந்து பதின்டா நகரை நோக்கி 20 பேருடன் அரசு பஸ் வந்தது. பதின்டாவை நெருங்கிய போது பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.மழை காரணமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால், இவ்விபத்து நேர்ந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like