1. Home
  2. தமிழ்நாடு

பள்ளி மாணவர்களே ரெடியா ? இன்று வெளியாகிறது 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை..!

1

2023 - 24 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டு மே மாதத்தில் முடிக்கப்பட்டது. இதனால் நடப்பு கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் மார்ச் மாதங்களில் நடத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் தேதிகள் குறித்து அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை இன்று காலை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இன்று காலை 09:30 மணிக்கு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தல், நீட், ஜே இ இ போன்ற நுழைவுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு தான் அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like