பராக் ஒபாமா ரஷ்யாவிற்குள் நுழைய தடை!!
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்க பிரபலங்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளது.
ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான பிரச்னை உக்ரைன் போருக்குப் பிறகு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தொலைக்காட்சி பிரபலங்களான ஸ்டீபன் கால்பெர்ட், ஜிம்மி கெம்மல், செத் மேயர்ஸ் உள்ளிட்ட 500 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு பதிலடி தரும் விதமாக இந்த நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.
தடைக்கு ஆளான நபர்கள் ரஷ்யாவுக்கு எதிராக போலிக் கருத்துக்களை பரப்பியுள்ளனர் என்றும், சிலரின் நிறுவனங்கள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி வருகின்றன என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
முன்னதாக உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு பொருளாதார நெருக்கடி தரும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக தடை உத்தரவை அமெரிக்க அரசு விதித்து.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ரஷ்யாவுக்கு எரிச்சலுட்டி வரும் நிலையில், தன் பங்கிற்கு இத்தகைய தடை நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.
newstm.in
.png)