நாளை மறுநாள் மதுரை செல்கிறார் அமைச்சர் உதயநிதி..!!

மதுரை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் வருகிற 6-ம் தேதி தி.மு.க. சார்பில் பாண்டி கோவில் ரிங் ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்த விழாவுக்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார். அவருக்கு மதுரை வடக்கு, மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளு மன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.