1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதியில் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்ற ஊழியர்கள்!!


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தேவஸ்தான ஊழியர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பக்தர்கள் தரிசனம் முடிந்து லட்டு பிரசாதத்துக்காக கவுண்ட்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.

தயாரிக்கும் இடத்தில் இருந்து லட்டுகள் தட்டுகளில் விற்பனை கவுண்ட்டர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் லட்டுகளை திருடி விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


திருப்பதியில் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்ற ஊழியர்கள்!!

இதையடுத்து தேவஸ்தான பறக்கும்படை அதிகாரிகள் லட்டுகளை எடுத்துச் செல்லும் பணியை கண்காணித்து வந்தனர். அப்போது ஊழியர்கள் 5 பேர் 750 லட்டுகளை திருடி எடுத்துச் சென்றனர்.

அப்போது அவர்களை பறக்கும் படை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, இதுவரை 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் திருமலை டவுன் போலீசார் கைது செய்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like