1. Home
  2. தமிழ்நாடு

தவறுதலாக வேறு ஒருவருக்கு பணம் அனுப்பிட்டிங்களா? எப்படி திரும்பி பெறுவது தெரியுமா ?

1

தவறுதலாக யுபிஐ மூலம் பணம் அனுப்பிவிட்டால் எப்படி திரும்ப பெறுவது என்ற வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் யுபிஐ பேமென்ட் உதவுகிறது. இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது.

காய்கறி கடை, மளிகை கடை முதல் அனைத்து இடங்களிலும் யுபிஐ பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆட்டோ சவாரி முதல் அனைத்து பயணங்களுக்கும் யுபிஐ மூலமாகவே பெரும்பாலும் பணம் செலுத்தப்படுகிறது.

நீங்கள் தவறான UPI கட்டணத்தைச் செலுத்தியிருந்தால் அதை எப்படி சரி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, தவறான UPI மூலம் பணம் செலுத்தப்பட்டிருந்தால், பணம் செலுத்திய 3 நாட்களுக்குள் அதைப் பற்றி வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும், பணம் செலுத்திய பிறகு பெறப்பட்ட மின்னஞ்சல் மற்றும் செய்தியை சரிபார்த்து, அதில் வங்கியில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை பற்றிய தகவல் எடுக்கப்படுகிறது. அதில் ஏதேனும் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அந்த வங்கியின் வாடிக்கையாளர் சேவையை அழைத்து முழுமையான அறிக்கையை அவர்களிடம் கொடுக்க வேண்டும்.

வாடிக்கையாளர் சேவையில் புகாரளித்த பிறகு அந்தப் பணம் வழக்கமாக 48 மணி நேரத்திற்குள் கணக்க்கு திரும்பி வரும். அவ்வாறு வரவில்லை என்றால், நீங்கள் வங்கிக்குச் சென்று எழுத்துப்பூர்வமாக புகார் செய்யலாம். அப்போது உங்கள் பரிவர்த்தனை ஐடி, அனுப்பப்படும் தொகை, கணக்கு விவரங்கள் போன்ற முழு விவரங்களையும் கொடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கிக்கும் எழுத்துப்பூர்வமாக நீங்கள் புகார் அளிக்கலாம்.

மற்றுமொரு வழி 

தேசிய கொடுப்பனவு ஆணையத்தில் (NPCI) (https://www.npci.org.in) புகார் அளிக்கலாம். இந்த முழு செயல்முறையும் ஆன்லைனில் மேற்கொள்ளலாம். நீங்கள் NPCI இணையதளத்திற்குச் சென்று, யுபிஐ கிளிக் செய்து அதில் Dispute Redressal Mechanism கிளிக் செய்ய வேண்டும் 

அதில்,

Transaction - person to person கிளிக் செய்ய வேண்டும் 
issue - incorrectly transferred to another account   

அதில் உங்கள் பெயர், எண், முகவரி, நீங்கள் UPI செய்து கொண்டிருந்த வங்கியின் பெயர், கணக்கு எண், அனுப்பப்பட்ட தொகை போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.

அனைத்து விவரங்களையும் கொடுத்த பிறகு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் அனுப்பிய புகாரை NPCI விசாரித்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும்.

Trending News

Latest News

You May Like