1. Home
  2. தமிழ்நாடு

தயவு செய்து இந்த நேரம் வெளியே போகாதீங்க.. அமைச்சர் முக்கிய அட்வைஸ்..!


தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை வெயில் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், எலுமிச்சை சாறு, இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளை பருக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவ காலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதுடன், நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும் என்றும், வெளியே செல்லும்போது காலணி அணிவதுடன், குடைகளையும் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும்போது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும், சிறிய குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like