1. Home
  2. தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது..!

Q

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். வியாழக்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பிரிட்டோ, மெஜோ ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
தொடர்ந்து இரண்டு படகுகளிலிருந்து ரிபாக்சன், ராஜ பிரபு, அரவிந்த் , ராபின்ஸ்டன், முனீஸ்வரன், பிரசாந்த், ஆரோக்கியம், பெட்ரிக் நாதன், யோபு, ஜான் இம்மரசன், அருள் பிரிட்சன், நிஷாத், வினித், அந்தோணி லிஸ்பன் ஆகிய 14 மீனவர்கள் கைது செய்யய்பட்டு இலங்கை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 67 தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்து 529 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like