1. Home
  2. தமிழ்நாடு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்களுக்காக புதிய வசதி..!!


சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நாள் தோறும் 1 லட்சத்து 78 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இரவு, பகல் என எப்போதும் சென்ட்ரல் ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படும்.

கோடை விடுமுறையையொட்டி சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. தற்போது கோடைவெயில் சுட்டெரித்து வருவதால் போதிய காற்றோட்ட வசதி இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். பயணிகள் காத்திருப்பு பகுதிகளில் உள்ள மின்விறியில் இருந்து போதிய காற்றும் வரவில்லை. சில மின்விசிறிகள் பழுதாகி இருந்தது. எனவே, கூடுதல் மின் விசிறிகளை நிறுவ வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நவீன தொழில்நுட்பம் கொண்ட ராட்சத மின்விசிறிகளை தெற்கு ரெயில்வே நிர்வாகம் பயணிகள் காத்திருப்பு பகுதியில் நிறுவியுள்ளது. மொத்தம் 4 மின்விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மின்விசிறியும் சுமார் 20 மீட்டர் உயரம் கொண்டது. 5 இறக்கைகள் உள்ளது. ராட்சத மின்விசிறிகளால் பயணிகள் காத்திருப்பு பகுதி முழுவதும் தென்றல் காற்று வீசுகிறது.இதனால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என பலரும் சிரமம் இன்றி காத்திருந்து ரெயிலில் ஏறி செல்கின்றனர்.

தெற்கு ரெயில்வேயின் இந்த முயற்சிக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Trending News

Latest News

You May Like