1. Home
  2. தமிழ்நாடு

செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்..!

1

தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, வேலூர் உட்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. மேலும் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக திருவள்ளூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரும்பாலான பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை அளவு குறைவாக உள்ளதால் கல்வி நிலையங்கள் இன்று வழக்கம்போல் செயல்படும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like