1. Home
  2. தமிழ்நாடு

கோர விபத்து : 4 பேர் பரிதாப பலி: நீதிபதி படுகாயம்..!

Q

தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி ஆனந்த் 6 பேருடன் காரில் திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி சென்ற கார் மேலகரந்தை அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இந்த விபத்தில் நீதிபதி பாதுகாவலர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நீதிபதி ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like