கூடுதல் விலைக்கு மதுபானம் – அமைச்சர் எச்சரிக்கை!!
டாஸ்மாக்கில் கூடுதலாக பணம் பெற்றுக் கொண்டு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை குறைப்பதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைப்பெற்று வருவதாக தெரிவித்தார்.
டாஸ்மாக்கில் கூடுதலாக பணம் பெற்றுக் கொண்டு மது விற்பனை செய்வதாக கூறப்படும் புகார் குறித்து எந்தக் கடை என்று குறிப்பிட்டு புகார் கூறினால் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை 1977 பேர் மீது நடவடிக்கை எடுத்து 5.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்படும் நபர்களை பாதுகாக்க ஒரு சில தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றன.
புகார் பெறப்படும் டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுமக்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
newstm.in
.png)