குழந்தை கேட்டு தொந்தரவு… காதலி கழுத்தறுத்து கொலை!!
குழந்தை கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த காதலன், தனது காதலியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் உடுமாபாரா கிராமத்தை சேர்ந்த தேவிகா (34) என்பவர் அழகு கலை நிபுணராக இருந்தார். திருமணமாகி அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சதீஷ் என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
சதீஷூக்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. 9 வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சதீஷின் குழந்தையை தேவிகா பார்த்துள்ளார். அந்த குழந்தையை பார்த்ததும் அதேபோன்று தனக்கு குழந்தை வேண்டும் என்று விரும்பி இருக்கிறார்.
இதனால், காதலனிடம் குழந்தை வேண்டும் என தொந்தரவு செய்து வந்திருக்கிறார். அப்படி இல்லை என்றால் உன்னுடைய குழந்தையை கொடு என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
குழந்தை வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் தேவிகா கேட்கவில்லை. இந்நிலையில் தனியார் விடுதியில் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது உன் மூலமாக எனக்கு குழந்தை வேண்டும் குழந்தை கொடு என்று கேட்டு அடம்பிடித்து இருக்கிறார்.
அப்போது ஆத்திரம் அடைந்த சதீஷ் கத்தியை எடுத்து தேவிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அதே கத்தியுடன் சென்று காவல் நிலையத்தில் நடந்த விபரத்தை சொல்லி சரணடைந்தார். சதீஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
newstm.in
.png)