குட் நியூஸ்..!! சிலிண்டர் விலை ரூ.57 குறைப்பு..!

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.57 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதுவரை 1999.50 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 57 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 1942 ரூபாய்க்கு இன்று முதல் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த இரு மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது வணிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.