1. Home
  2. தமிழ்நாடு

காவிரி ஆற்றில் மூழ்கி தந்தை, மகன் பலி!!


ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஜவகர் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி வந்தார். இவர் மனைவி பிரியா, மகன் நந்த கிஷோர், மகள் கன்னிகாவுடன் வசித்து வந்தார்.

மகன் நந்தகிஷோர் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறை என்பதால் ரமேஷ் குடும்பத்துடன் சுற்றுலா சென்றார்.

அவரது சகோதரர் பாலமுருகன், சகோதரி லதா என மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காரணாம்பாளையம் அணைக்கட்டுக்குச் சுற்றுலா சென்றனர்.


காவிரி ஆற்றில் மூழ்கி தந்தை, மகன் பலி!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகளைக் குளிப்பதற்கு காவல்துறையினர் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் அருகில் உள்ள கருவேலம்பாளையம் காவிரி ஆற்றில் குளித்தனர்.

அப்போது ரமேஷ்குமார் மற்றும் அவரது மகன் நந்த கிஷோர் இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்தனர். அப்போது திடீரென இருவரும் நீரில் மூழ்கினர். இதைப்பார்த்து அவர்களது குடும்பத்தினர் கூச்சலிட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இருவரையும் சடலமாக மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like