காரில் வந்து பெண்ணிடம் நகை பறிப்பு!!
கோவையில் காரில் வந்து பெண்ணிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவையில் நடைபயிற்சி மேற்கொண்ட கௌசல்யா என்ற பெண்ணிடம் காரில் வந்த நபர்கள் தங்க செயினை பறிக்க முயன்றனர். அப்போது செயினை கௌசல்யா இறுகப் பிடித்து கொண்டார். அப்பெண் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு நூலிழையில் உயிர் தப்பினார்.
இதன் சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியான நிலையில், செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.
பீளமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் (25) மற்றும் அபிஷேக் (29) ஆகிய இருவரிடமும் விசாரணை செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செயின் பறிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
இதில் அபிஷேக் குமார் மீது ஏற்கனவே இது போன்ற நகைப்பறிப்பு வழக்குகள் உள்ளன. அவர் சுவிகியில் பணியாற்றி வந்தவர். சக்திவேல் மீது எந்த வழக்கும் கிடையாது.
காரின் உரிமையாளர் அவர்தான் என்றும், பீளமேடு பகுதியில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு 7 ஆண்டுகளாக நண்பர்களாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. வாகனத்திற்கு நம்பர் பிளேட் இல்லை, இருப்பினும் காரில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் அடிப்படையில் தனிப்படைகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
newstm.in
.png)