1. Home
  2. தமிழ்நாடு

காதல் சுகுமார் மீது துணை நடிகை புகார்!

Q

காதல் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் நன்கு பிரபலமானவர் சுகுமார். கிட்டதட்ட 10 ஆண்டுகளாக ஸ்கிரீனில் வராதவர் சமீபத்தில் வெளியான ஸ்டார் படம் மூலம் மீண்டும் தனது நடிப்புக்கு பாராட்டைப் பெற்றிருக்கிறார். சினிமாவில் நடிக்காமல் இருந்த காலக்கட்டத்தில் இயக்குநராகவும் பணியாற்றினார்.

ஸ்டார் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரியான காதல் சுகுமார், தெருக்கூத்து கலைகள் மற்றும் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டப்பாங்குத்து திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து 'வெற்றி வேலப்பர்' எனும் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சில ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு, நகை மற்றும் பணத்தை பெற்று மோசடி செய்துவிட்டதாக நடிகர் காதல் சுகுமார் மீது, துணை நடிகை ஒருவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காதல் சுகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like