கடைக்குச் சென்ற பெற்றோர்.. புடவையில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ரகுபதி, தனது மனைவி மகனுடன் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை ரகுபதி தன் மனைவியுடன் கடைக்கு சென்றிருக்கிறார். அவர்களின் மகன் பாலாஜி(11) வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.
இந்நிலையில் வீட்டின் கதவு திறந்து இருப்பதைப் பார்த்துவிட்டு, பக்கத்து வீட்டில் வசித்து வரும் கோவிந்தராஜ் என்பவர் வந்துள்ளார். அப்போது சிறுவன் பாலாஜி, தொட்டில் கட்டியிருந்த புடவை கழுத்தை இறுக்கி, மயங்கிய நிலையில் தொங்கியபடி கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சிறுவனை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் பாலாஜி முன்னதாகவே இறந்துவிட்டதாக தெரிவித்தர்.
இதனை செல்போன் மூலம் சிறுவனின் பெற்றோருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் கதறி அழுதப்படி மருத்துவமனைக்கு ஓடிவந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in