1. Home
  2. தமிழ்நாடு

ஓட்டுநர்-நடத்துநர் பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!

1

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பதவிக்கு தகுதி உள்ள நபர்களை தேர்வு மூலம் நியமிக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி பலரும் பணிக்கு இணையதளம் வாயிலாக தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது இணையதளத்தில் தேர்வு கூட அனுமதி சீட்டு வெளியாகி உள்ளது.

இதனை தேர்வர்கள் https://www.arasubus.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட்டை பெறுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் 04447749002 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகம்மூலம் பரிந்துரை செய்யப்பட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு பதிவுத் தபால் மூலமாக தேர்வுக்கான நுழைவு அனுமதி சீட்டு அனுப்பப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like