1. Home
  2. தமிழ்நாடு

எங்கள் கூட்டணிக்கு தவெக வரலாம்.. ஆனால் ஈபிஎஸ் தான் முதல்வர்: ராஜேந்திர பாலாஜி

1

 முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று அளித்த பேட்டியில், 

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், அ.தி.மு.க.வை சேர்ந்தவர்தான் முதலமைச்சர் என்று அமித்ஷா கூறியது குறித்து கேட்டதற்கு, "அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என்றால் எடப்பாடி பழனிசாமிதான். அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. அமித்ஷா நேரம் வரும்போது தெளிவாக சொல்லலாம் என்று இருந்திருக்கலாம்," என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்கு வருமா என்ற கேள்விக்கு, "தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் கூட்டணியில் விஜய் கட்சி வருவதற்கான வாய்ப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே, கூட்டணியில் தவெக இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது," என்று அவர் கூறினார்.

மேலும், தி.மு.க.வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும், அதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்றும் ராஜேந்திர பாலாஜி இன்னொரு கேள்விக்குப் பதில் அளித்தார். "தி.மு.க. ஆட்சியை எதிர்க்கின்ற அத்தனை கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை அவர் செய்து வருகிறார்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

Trending News

Latest News

You May Like