உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கினார் அமைச்சர் பொன்முடி..!
‘பெஞ்சல்’ புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 51 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது .புயல் கரையைக் கடப்பதற்கும் முன்பு தொடங்கிய மழை, கரையைக் கடந்த பின்னரும் மழை தொடர்ந்தது . இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக் காடாக மாறியது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பேரிடர் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் 12 வாரிசுதார்களுக்கு நிவாரணத்தொகைக்கான தலா 5 லட்சத்திற்கான காசோலையினை வனத்துறை அமைச்சர் பொன்முடி வழங்கி வருகின்றார்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்த குடும்ப வாரிசுதாரருக்கு நிவாரண தொகை வழங்கினார்.