1. Home
  2. தமிழ்நாடு

உன்னை எப்படி பழிவாங்க போறேன்னு பாரு.. உறவினருக்கு அந்தரங்க வீடியோ அனுப்பிய இளைஞர்!

1

தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் முசாபுதீர். சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தென்காசி மாவட்டத்தில் திருமணமான 30 வயது இளம் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பாலியல்

இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். தனிமையில் அந்தரங்கமாக இருந்த போது, அந்த பெண்ணுக்கு தெரியாமல் முசாபுதீன் தனது செல்போனில் படுக்கையறையை வீடியோவாக எடுத்துள்ளார். இருவரும் அந்த பெண்ணின் வீட்டில் அடிக்கடி சந்தித்து தனிமையில் பழகி வந்தது தெரிய வந்து இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் முசாபுதீனுடன் பேசுவதையும், பழகுவதையும் இளம்பெண் நிறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த முசாபுதீன் இளம்பெண்ணுடன் தனிமையில் அந்தரங்கமாக இருந்த வீடியோவை பெண்ணின் உறவினருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கடையநல்லூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து முசாபுதீனை கைது சிறையில் அடைத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like