இளைஞர் மரணம்: 5 லட்சம் நிவாரணம் -அமைச்சர் உத்தரவு..!
சென்னை பட்டினப்பாக்கம் சாலையில் நடந்து சென்ற 23 வயது இளைஞர் சையத் குலாப் மீது ஜன்னல் மேற்கூரையானது நேற்று இரவு இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அந்த கட்டிடத்தில் நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு ஆகும். இதில் சிறிய சிறிய பிரச்சனைகள் இருந்ததாகவும், இது தொடர்பாக ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் அந்த கட்டிடத்தை மாற்றி தரக்கோரியும், புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வேண்டும் என்று கூறியும் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் காரணாக கலங்கரை விளக்கம் லூப் சாலையில் இருந்து அடையாறு வரை வாகனங்கள் நகர முடியாமல் வரிசை கட்டி நின்றன.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் அலுவலகத்துக்கு செல்வோர் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இவ்வாறு இருக்கும் நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் கட்டட விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ₹5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 60 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்ததால் கட்டடம் சிதிலமடைந்த நிலையில் இருந்ததாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.