இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..! 3 நாட்களில் ரூ.2,200 குறைந்த தங்கம் விலை!

நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையே, கடந்த 21ம் தேதி தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தங்கம் விலை 67 ஆயிரத்தை தொட்டது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
அந்த வகையில், தங்கம் விலை கடந்த 4ம் தேதி ரூ.160 குறைந்து ரூ.8,400-க்கும், சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் (ஏப்.5) கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8.,310-க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480 விற்பனையானது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று (ஏப்.7) மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,285-க்கும், கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ.2,200-க்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
06-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480
05-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480
04-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,200
03-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480
02-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080