இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! அதிகரிக்கும் தக்காளி விலை..!
கடந்த மாதம் சில்லரை விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.30-க்கு மட்டுமே விற்கப்பட்டது. இந்த நிலையில் வரத்து குறைந்து வருவதால் தக்காளி விலை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஒரு கிலோ ரூ.55-க்கு விற்கப்பட்ட தக்காளி சில்லறை கடைகளில் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.25க்கு விற்பனையான தக்காளி ஒரே வாரத்தில் ரூ.30 அதிகரித்துள்ளது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தக்காளி விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதனால் தினசரி உணவில் தக்காளி பயன்பாட்டை குறைத்து விட்டனர். தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உற்பத்தி நடக்கும் இடத்திலேயே விலை கடுமையாக அதிகரித்து உள்ளது.