1. Home
  2. தமிழ்நாடு

இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

1

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஆங்காங்கே விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் பல இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (15.11.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Trending News

Latest News

You May Like