இன்று மாசி பௌர்ணமி : இன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகுந்த நேரம் இதோ..!

திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள 14 கி.மீ தொலைவு கிரிவலப் பாதையை மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபடுவது வழக்கம்.
அதன்படி, மாசி பெளா்ணமி வியாழக்கிழமை (மார்ச் 13) காலை 11.40 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை (மார்ச் 14) பிற்பகல் 12.54 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் செய்துள்ளது.
மாசிமகத்தில் வரும் பெளர்ணமி என்பதால் இந்த பெளர்ணமிக்கு பக்தர்கள் வழக்கத்தை அதிகளவு கிரிவலத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து வழக்கமாக திருவண்ணாமலைக்குச் செல்லும் பேருந்துகளை காட்டிலும் 350 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறையை முன்னிட்டு பிற மாவட்டங்களுக்கு 616 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து கழகத்தின் இந்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.