1. Home
  2. தமிழ்நாடு

இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை..!


கடந்த 10-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வர் பதவிக்கான உள்கட்சி இழுபறிகள் முடிவுக்கு வந்த நிலையில் இன்று பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க ஒருமித்த கருத்துடைய பல்வேறு கட்சிகளுக்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், அழைப்பு விடுக்கப்பட்டும் கூட திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ககோலி தஸ்திதார் கலந்து கொள்கிறார். இது குறித்து திரிணமூல் எம்.பி. டெரக் ஓ ப்ரெயன், "கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள சித்தராமையா, முதல்வர் மம்மதா பானர்ஜிக்கு தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார். சித்தராமையாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர் மம்தா திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவையின் துணைத் தலைவர் ககோலி தஸ்திதாரை விழாவுக்குச் செல்ல பணித்துள்ளார்” என்று பதிவிட்டிருந்தார்.

Trending News

Latest News

You May Like