1. Home
  2. தமிழ்நாடு

இனி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாது... அஜித்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன்.. ?

1

அல்லு அர்ஜுன் நடித்துதுள்ள  புஷ்பா படம் வெளியாவதையொட்டி, அதிகாலை பிரிமியர் ஷோவுக்கு அரசு அனுமதி வழங்கியிருந்தது. மேலும் டிக்கெட் விலையை உயர்த்திக்கொள்ளவும் மாநில அரசு அனுமதி வழங்கியது.மேலும் இந்த படம்  5 நாட்கள் சிறப்பு காட்சிகளை ஓட்டவும் தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கி  இருந்தது.

இதற்கிடையில், புஷ்பா-2 படத்தின் டிக்கெட் விலையை உயர்த்திய தெலுங்கானா அரசின் முடிவை எதிர்த்து ஐதராபாத்தில் உள்ள பத்திரிகையாளர் சதீஷ் கமல் என்பவர் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிமன்றம், அதற்கு தடை கோரியிருந்தது. நவம்பர் 29 தேதியிட்ட மெமோ, இதன் மூலம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்கெட் விலை உயர்வுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த நிலையில்,  “பொதுமக்கள் நலன் கருதி இனி தெலுங்கானாவில் அதிகாலை சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதி இல்லை” என்பதை அந்த மாநில அமைச்சர் கோமதி ரெட்டி அறிவித்துள்ளார். 


கடந்த ஆண்டு அஜித்தின் துணிவு படமும், விஜயின் வாரிசு படமும் ஒரே நாளில் வெளியானது. இதில் துணிவு பட அதிகாலை காட்சியின் போது கூட்டத்தில் ஒரு இளைஞர் பலியானதால் தமிழகத்தில் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் போலீஸ் தடியடியால் ஏற்பட்ட கூட்டத்தால் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளதால் இத முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

Trending News

Latest News

You May Like