அல்லு அர்ஜூனை காண கூட்டத்தில் முண்டியடித்ததால் இளம்பெண் உயிரிழப்பு..!
‘புஷ்பா 2’ படத்தின் அதிகாலை காட்சிக்கு தமிழகத்தைத் தவிர பரவலாக பல மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை ப்ரீமியர் காட்சியைக் காண குடும்பத்துடன் வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த பெண் ரேவதிக்கு வயது 39 எனத் தெரிகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய அப்பெண்ணை காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்தார். அவருடைய குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகத் தெரிகிறது. ஹைதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் சந்தியா திரையரங்கில் 9.30 மணிக்கு ப்ரீமியர் காட்சி நடைபெறுவதாக இருந்தது. அதற்கு வந்த அல்லு அர்ஜூனைக் காண கூட்டத்தில் ரசிகர்கள் முண்டியடித்தபோது இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது.