1. Home
  2. தமிழ்நாடு

அரசு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்..? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்..!

1

அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது., அரசு பொதுத் தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும். மேலும் நீட், கிளாட் போன்ற தேர்வுகள் பொதுத்தேர்வு தேதிகளோடு வராத வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மூன்று வகையான அட்டவணை தயாராக உள்ளது.

அரசு சார்பில் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அந்த வகையில் நீட் தேர்வு பயிற்சிக்கு 46,216 மாணவர்களும், ஜே.இ.இ பயிற்சிக்கு 29279 மாணவர்களும், 31,730 மாணவர்கள் இரண்டுக்கும் சேர்ந்து விண்ணப்பித்து இருக்கிறார்கள். மழை முன்னெச்சரிக்கை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளன என கூறினார்.

இதற்கிடையே தமிழக பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மொத்தம் ஒரு லட்சத்து, 7 ஆயிரத்து, 225 மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. நீட் தேர்வு எழுத, 46,216 பேரும், ஜே.இ.இ., தேர்வுக்கு, 29,279 பேரும், இரு தேர்வுகளையும் எழுத 31,730 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் எனக்கூறப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like