1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! பெண் சிங்கம் போலீஸ் அதிகாரி விபத்தில் பலி!!


பெண் சிங்கம் என்று அழைக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் நகோன் மாவட்டம் மொரிகொலாங் போலீஸ் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜுமொனி ரபா (30) பெண் சிங்கம் என்று பலராலும் அழைக்கப்பட்டவர்.

மோசடி வழக்கில் தனது வருங்கால கணவரையே அவர் கைது செய்தார். மேலும், குற்றவாளிகள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுத்து பிரபலமானார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருந்தன.


அதிர்ச்சி! பெண் சிங்கம் போலீஸ் அதிகாரி விபத்தில் பலி!!


அதனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், உதவி காவல் ஆய்வாளர் ஜுமொனி ரபா நேற்று அதிகாலை சாலை விபத்தில் உயிரிழந்தார்.

ரபா அதிகாலை 2.30 மணியளவில் தனது காரில் சஹ்குயா என்ற கிராமப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் வேகமாக வந்த லாரி ரூபா சென்ற காரில் வேகமாக மோதியது.


அதிர்ச்சி! பெண் சிங்கம் போலீஸ் அதிகாரி விபத்தில் பலி!!

இந்த கோர விபத்தில் ரூபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜுமொனி ரபாவின் உடலை மீட்டனர்.

மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இது திட்டமிட்ட படுகொலையா, அல்லது விபத்தா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like