1. Home
  2. தமிழ்நாடு

நாகையில் ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி!!

நாகையில் ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி!!

நாகை மாவட்டம் திருப்பூண்டியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அரசு பெண் மருத்துவரிடம் ஹிஜாப்பை கழற்றச் சொல்லி ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியை போலீஸார் தேடி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இஸ்லாமிய பெண் மருத்துவர் இரவு பணியில் இருந்த போது, அங்கு வந்த புவனேஷ் ராம் என்ற பாஜக நிர்வாகி, மருத்துவரிடம் பிரச்னை செய்துள்ளார். ஹிஜாப் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மிரட்டும் தொனியில் பேசிய அந்த நபர், தனது செல்போனிலும் வீடியோவாக பதிவு செய்தார். பெண்கள் பணியில் இருக்கும்போது அசிங்கமாக பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு பெண் மருத்துவரை அவரின் அனுமதியில்லாமல் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார் எனச் சொல்லி அவரும் வீடியோ எடுத்துள்ளார்.


நாகையில் ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகி!!

இரண்டு வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


இந்நிலையில், அரசு மருத்துவரை பணி செய்யவிடாமல், ஏன் ஹிஜாப் அணிந்து இருக்கிறீர்கள் என மிரட்டலாகக் கேட்ட பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீது காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது புவனேஷ் ராம் தலைமறைவாக உள்ளதால் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் தலைமறைவான பாஜக நிர்வாகியை பிடிக்க தனிப்படை6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like