1. Home
  2. தமிழ்நாடு

சிங்கப்பூரில் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சிங்கப்பூரில் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சிங்கப்பூரில் 'வேர்களைத் தேடி' என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

சிங்கப்பூரில் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

அதைத்தொடர்ந்து டமாசெக் நிறுவன தலைமை செயல் அலுவலர், முதல்வர் முதலீடுகள் செய்திட அழைப்பு விடுத்த பல்வேறு துறைகளோடு மட்டுமின்றி, மீன்பிடி சார்ந்த தொழில் துறைகளிலும், உணவுப் பதப்படுத்தும் துறைகளிலும் தங்கள் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக முதல்வரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் 'வேர்களைத் தேடி' என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக சிங்கப்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 இளைஞர்களுக்கு தெரிவு சான்றிதழ்களை முதல்வர் வழங்கினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like