1. Home
  2. தமிழ்நாடு

சபரிமலை பொன்னம்பலம் மேட்டில் அனுமதியின்றி நுழைந்தவர் சென்னையை சேர்ந்தவரா ?

சபரிமலை பொன்னம்பலம் மேட்டில் அனுமதியின்றி நுழைந்தவர் சென்னையை சேர்ந்தவரா ?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மகர விளக்கு பூஜையின் போது மகர தோன்றும் ஜோதி தோன்றும் இடம் பொன்னம்பல மேடு. இந்த இடம் சபரிமலை பக்தர்களின் புனிதமான இடமாக கருதப்படுகின்றது.

பொன்னம்பலம் மேடு ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இந்த பொன்னம்பலம் மேட்டில் ஒருவர் அனுமதியின்றி சட்டவிரோதமாக நுழைந்து சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார் . இதை சிலர் வீடியோ எடுத்து சபரிமலை தேவசம்போர்டு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் . இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது .

தேவசம்போர்டு இது குறித்த விசாரணையில் இறங்கிய போது, சபரிமலை சன்னிதானம் அருகே வனப்பகுதிக்குள் நுழைந்து பொன்னம்பல மேட்டில் சிறப்பு பூஜை செய்தவர் சென்னையைச் சேர்ந்த நாராயணசாமி என்கிற 56 வயது நபர் என்பது தெரிய வந்திருக்கிறது. இவர் சபரிமலை கோவிலில் கீழ் சாந்தியின் உதவியாளர்களில் ஒருவராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

நாராயணசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. சிறப்பு பூஜைகள் நடப்பதாக தேவசம்போர்டு பெயரில் போலியாக ரசீது அச்சிட்டு பக்தர்களை ஏமாற்றி ரசீது விற்பனை செய்து பண மோசடி செய்தது உள்ளிட்ட புகார்களில் சிக்கி இருக்கிறார். இதனால் நாராயண சாமி மீது நடவடிக்கை எடுத்து அவரை பணி நீக்கம் செய்துள்ளது தேவசம்போர்டு. இந்த நிலையில் தான் நாராயணசாமி பொன்னம்பலம் மேட்டில் அத்துமீறி பூஜைகள் செய்து இருக்கிறார். இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அனுமதி இன்றி நுழைந்த நாராயணசாமி மீது பச்சைகாணம் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like