1. Home
  2. தமிழ்நாடு

உலகின் பரிதாபகரமான நாடுகள்!!

உலகின் பரிதாபகரமான நாடுகள்!!

உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே வருடாந்திர துயரக் குறியீட்டை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளின் பொருளாதார சூழலின் அடிப்படையில் இந்த குறியீடு வெளியிடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடத்தை பிடித்துள்ளது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன், சிரியா மற்றும் சூடான் நாடுகளை பின்னுக்கு தள்ளி ஜிம்பாப்வே முதலிடத்தை பிடித்துள்ளது.

ஜிம்பாப்வேவில் கடந்த ஆண்டு, பணவீக்க விகிதம் 243 சதவிகித்தை கடந்தது. இது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பின்மை, அதிகப்படியான கடன் வட்டி, பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக ஜிம்பாப்வே பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகின் பரிதாபகரமான நாடுகள்!!

வெனிசுலா, சிரியா, லெபனான், சூடான், அர்ஜென்டினா, ஏமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹைட்டி, அங்கோலா, டோங்கா மற்றும் கானா நாடுகள் பட்டியலில் முதல் 15 இடங்களை பிடித்துள்ளன.

வேலைவாய்ப்பின்மை காரணமாக இந்தியா 103-வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா 134-வது இடத்தில் உள்ளது. அங்கும் வேலைவாய்ப்பின்மையே மக்களின் துயரத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதே போல், குவைத், அயர்லாந்து, ஜப்பான், மலேசியா, தைவான், நைஜர், தாய்லாந்து, டோகோ, மால்டா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

newstm.in

Trending News

Latest News

You May Like