1. Home
  2. தமிழ்நாடு

இனி டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்கும்

இனி டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்கும்

டாஸ்மாக் கடைகளில் ஒரு மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்படுகிறது என புகார் எழுந்ததை அடுத்து, டாஸ்மாக் கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, “மதுபான கடைகள் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூட வேண்டும். டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் வைக்கப்படுவதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளில் பதிவேடுகளை தினசரி முறையாக பராமரிக்க வேண்டும்.

மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது. கூடுதல் விலைக்கு மது விற்றால் சம்பந்தப்பட்ட கடை ஊழியரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும். மதுபான கடைகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களை கண்டறிய வேண்டும். வழிபாட்டுத் தலம், கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டருக்குள் உள்ள மதுபானக் கடைகளை கணக்கெடுக்க வேண்டும். வழிபாட்டுத்தலம், கல்வி நிறுவனங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் இருக்கக்கூடாது.

டாஸ்மாக் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்கிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். சட்டவிரோத மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை முதுநிலை மண்டல மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். கள்ளச்சாராயம், போலி மது விற்கப்படுவதை கண்டறிந்து காவல்துறைக்கு மதுக்கடை ஊழியர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like