வி.பி.சந்திர சேகர் மறைவு: சச்சின் டெண்டுல்கர் இரங்கல்

சென்னையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திர சேகர் மறைவுக்கு சச்சின் டெண்டுல்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 | 

வி.பி.சந்திர சேகர் மறைவு: சச்சின் டெண்டுல்கர் இரங்கல்

சென்னையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திர சேகர் மறைவுக்கு சச்சின் டெண்டுல்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வசித்து வரும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் நேற்று இரவு தன் வீட்டின் உள்ள அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடன் பிரச்னையாலும், காஞ்சி வாரியர்ஸ் அணிக்கு ஸ்பான்சர் ஷிப் கிடைக்காத காரணத்திலும் வி.பி.சந்திரசேகர் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வி.பி.சந்திர சேகர் மறைவு: சச்சின் டெண்டுல்கர் இரங்கல்

இந்த நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சச்சின் டெண்டுகல்கர் ட்விட்டரில், 'வி.பி.சந்திரசேகருடன் பழகிய அன்பான நினைவுகள் மறக்க முடியாதவை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், வி.பி.சந்திரசேகர் மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விவிஎஸ்.லட்சுமணன், ஹர்பஜன்சிங் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP