டெஸ்ட் கிரிக்கெட்: 3-ஆவது இடம் பிடித்த பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் பவுலிங் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
 | 

டெஸ்ட் கிரிக்கெட்: 3-ஆவது இடம் பிடித்த பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் பவுலிங் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பந்துவீச்சாளார்களின் தரவரிசை பட்டியலில், ஆஸி., வீரர் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிட்த்தில் உள்ளார். 851 புள்ளிகளுடன் ரபாடா 2-ஆவது இட்த்திலும், நான்காவது இட்த்தில் இருந்த பும்ரா 835 புள்ளிகள் பெற்று 3 –ஆவது இட்த்திற்கு முன்னேறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசியதால் பும்ரா தரவரிசை பட்டியலில் 3-ஆவது இட்த்தை பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா 13 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், 2-ஆவது டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் பும்ரா.

முதல் டெஸ்ட்டில்,  டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளார் என்ற சாதனையும் பும்ரா படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்: 3-ஆவது இடம் பிடித்த பும்ரா

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP