டென்னிஸ் தரவரிசை: 2 வருடத்திற்கு பின் டாப்-100ல் யுகி பாம்ப்ரி

2016ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக டென்னிஸ் தரவரிசையில் டாப்-100ல் யுகி பாம்ப்ரி இடம் பெற்றுள்ளார்.
 | 

டென்னிஸ் தரவரிசை: 2 வருடத்திற்கு பின் டாப்-100ல் யுகி பாம்ப்ரி

டென்னிஸ் தரவரிசை: 2 வருடத்திற்கு பின் டாப்-100ல் யுகி பாம்ப்ரி

2016ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக டென்னிஸ் தரவரிசையில் டாப்-100ல் யுகி பாம்ப்ரி இடம் பெற்றுள்ளார். 

தைவானில் நடைபெற்ற தைபை சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர் யுகி பாம்ப்ரி. இதன் மூலம், ஏடிபி தரவரிசையில் 22 இடங்கள் முன்னேறி 83-வது இடத்தை பிடித்தார். பிப்ரவரி 2016ம் ஆண்டிற்கு பிறகு டாப் 100-க்குள் பாம்ப்ரி நுழைந்துள்ளார். 

இந்திய வீரர் சோம்தேவ் தேவர்மனுக்கு பின், டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் சிறந்த தரவரிசையை பாம்ப்ரி பெற்றுள்ளார். 2011ம் ஆண்டு தேவர்மன் 62-வது இடத்தை பிடித்திருந்தார். 2015ம் ஆண்டு பாம்ப்ரி முதல் முறையாக பாம்ப்ரி டாப் 100-க்குள் நுழைந்திருந்தார். 

தைபை சேலஞ்சர் போட்டியில் பாம்ப்ரியிடம் தோல்வி கண்ட ராம்குமார் ராமநாதன், 17 இடங்கள் முன்னேறி 116-வது இடத்தை பிடித்தார். சுமித் நகல் இரண்டு இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு 215-வது இடத்தில் உள்ளார். பிரஜ்நேஷ் குன்னேஸ்வரன் 266-வது, அர்ஜுன் கதே 394-வது இடங்களிலும் உள்ளனர்.

இரட்டையர் பிரிவில், டிவிஜ் ஷரன் ஒரு இடம் ஏற்றம் கண்டு 41-வது, லியாண்டர் பயஸ் நான்கு இடங்கள் கீழே இறங்கி 49-வது இடத்தையும் பிடித்தனர். ரோஹன் போபண்ணா 19-வது இடத்தில் இருக்கிறார். 

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில், அங்கிதா ராணா மூன்று இடங்கள் முன்னேறி 194-வது, கர்மன் கவுர் தண்டி ஒரு இடம் இறங்கி 268-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா 24-வது இடத்தில் நீடிக்கிறார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP