Logo

யுஎஸ் ஓபன் அரையிறுதியில் செரினா வில்லியம்ஸ்

நியூயார்க்கில் நடந்து வரும் யுஎஸ் ஓபன் போட்டியில், அமெரிக்காவின் செரினா - செக் குடியரசின் கரோலினா பிளிஸ்க்கோவா மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் மோதினர். இப்போட்டியில் செரினா 6-4, 6-3 என பிளிஸ்க்கோவாவை வென்றார்.
 | 

யுஎஸ் ஓபன் அரையிறுதியில் செரினா வில்லியம்ஸ்

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், யுஎஸ் ஓபன் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். 

நியூயார்க்கில் நடந்து வரும் யுஎஸ் ஓபன் போட்டியில், அமெரிக்காவின் செரினா - செக் குடியரசின் கரோலினா பிளிஸ்க்கோவா மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் மோதினர். ஒரு மணி நேரம் 26 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் செரினா 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் பிளிஸ்க்கோவாவை வென்றார். 

அரையிறுதி ஆட்டத்தில் செரினா - லாத்வியாவின் அனஸ்தஸிஜா செவஸ்டோவாவை எதிர்கொள்ள இருக்கிறார். 

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நவோமி ஒசாகா - மார்ட்டின் கீஸ் மோதுகின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP