17வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார் ரஃபேல் நடால்!

ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், இன்று நடைபெற்ற பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில், ஆஸ்திரிய வீரர் டொன்மினிக் தியெம்மை 6-4, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தனது 17வது கிராண்ட் ஸ்லாம் படத்தை வென்று சாதனை படைத்தார்.
 | 

செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சை நாக் அவுட் செய்து பெரும் எதிர்பார்ப்புடன் வந்த 24 வயதேயான இளம் வீரர் தியெம்மால் ஆரம்பத்தில் இருந்தே நடாலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. க்ளே கோர்ட்டின் மன்னராக கருதப்படும், நடால், ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தினார். முதல் இரண்டு செட்களை 6-4, 6-3 என நடால் கைப்பற்ற, கடைசி செட்டில் தியெம் கடுமையாக விளையாடினார். ஆனாலும், தொடர்ந்து நடால் சிறப்பாக விளையாட, 3வது செட்டையும் 6-2 என கைப்பற்றி, சாம்பியன் பட்டத்தை வென்றார். 

ஆடவர் டென்னிஸில் தனது 17வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் நடால், பிரென்ச் ஓபன் பட்டத்தை 11வது முறை வென்றுள்ளார். பிரென்ச் ஓபன் தொடரை அதிக முறை வென்றுள்ள சாதனையை இதன் மூலம் நடால் நீட்டித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP