ஹாலே ஓபன்: காலிறுதியில் நம்பர் ஒன் பெடரர்

ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் நம்பர் ஒன் ரோஜர் பெடரர்.
 | 

ஹாலே ஓபன்: காலிறுதியில் நம்பர் ஒன் பெடரர்

ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் நம்பர் ஒன் ரோஜர் பெடரர். 

ஜெர்மனியின் ஹாலே வெஸ்ட்ஃபாலன் நகரில் க்ராஸ்கோர்ட் ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தனது 10-வது சாம்பியன் பட்டத்துக்காக போட்டியிட்டு வரும் நம்பர் ஒன் வீரர் ஸ்விட்சர்லாந்தின் பெடரர், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்சின் பெனாய்ட் பைரேவை எதிர்கொண்டார். 

இதில் பெடரர் 6-3, 3-6, 7-6 (9/7) என்ற கணக்கில் பைரேவை வீழ்த்தி, காலிறுதியை எட்டினார். இன்று நடக்க இருக்கும் காலிறுதியில், உலக தரவரிசையில் 60-வது இடம் வகிக்கும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எபிடெனுடன், பெடரர் மோதுகிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP