14வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் போட்டியில், அர்ஜென்டினாவை சேர்ந்த டெல் போட்ரோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் நோவாக் ஜோகோவிச். இது அவர் வெல்லும் 14வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
 | 

14வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், அர்ஜென்டினாவை சேர்ந்த டெல் போட்ரோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச். இது அவர் வெல்லும் 14வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். 

சர்வதேச அளவில் 6வது இடத்தில் உள்ள பிரபல நோவாக் ஜோகோவிச், 3வது இடத்தில் உள்ள டெல் போட்ரோவை, அமெரிக்க ஓபன் இறுதி போட்டியில் சந்தித்தார். இரண்டாம் நிலை வீரரான நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர், ரவுண்ட் ஆப் 16ல் தோற்ற நிலையில், நம்பர் 1 வீரர் நடால் அரையிறுதி போட்டியில் காயம் காரணமாக வெளியேறினார். எனவே இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. 

ஆரம்பம் முதல் முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடினார் ஜோகோவிச். முழுக்க முழுக்க அதிரடி காட்டிய அவர், டெல் போட்ரோவை 6-3, 7-6 (7/4), 6-3 என நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். இந்த வெற்றியை தொடர்ந்து, அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவன் பீட் சாம்ப்ராஸின் 14 கிராண்ட் ஸ்லாம் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார். 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளுக்கு பின், 3வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP